இந்தியா

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு : இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு : இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி

webteam

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்திய பொருளாதாரம் கொரோனா வைரஸ் மற்றும் பொதுமுடக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக பொதுமுடக்கம் இந்திய பங்கு சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகள் பலவும் பொருளாதார சரிவை சந்தித்திருக்கின்றன.

இதனால் இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடிக்கான திட்டங்களை கடந்த நில தினங்களாக அறிவித்தார். நேற்றுடன் அறிவிப்புகள் அனைத்தும் நிறைவடைந்தன.

பொருளாதார அறிவிப்புகளுக்குப் பின்னர் இன்று இந்திய பங்கு சந்தைகளின் மதிப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, மும்பை பங்கு சந்தை மதிப்பீடான சென்செக்ஸ் 884.46 புள்ளிகள் அல்லது 2.84% சரிந்து 30213.27 புள்ளிகளுக்கு வர்த்தகமாகியது. அத்துடன் தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 257.75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 8879.10 புள்ளிகளுக்கு சென்றது.