கச்சா எண்ணெய் புதிய தலைமுறை
இந்தியா

இந்தியாவில் எகிறும் கச்சா எண்ணெய் இறக்குமதி.. இதுவரை இல்லாத அளவில் வரலாறு காணாத உச்சம்!

நமது நாடு, கடந்த மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.

PT WEB

கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகின் மிகப்பெரிய 3ஆவது நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், சென்ற மே மாதத்தில் 2 கோடியே 18 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. உள்நாட்டில் எரிபொருள் தேவையைப் பூர்த்திசெய்யவும், கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதற்கும் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய்

இதற்கு முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்போதைய அதிகளவாக 2 கோடியே 16 லட்சம் டன் அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க: கர்நாடகா கொலை வழக்கு|கார் டிரைவர் அளித்த பகீர் வாக்குமூலம்.. நடிகர் தர்ஷனை பாதுகாக்கும் காங். ஆட்சி?

அதற்கடுத்ததாக, 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 2 கோடியே 15 லட்சம் டன்களும், ஏப்ரலில் 2 கோடியே 14 லட்சம் டன்களும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. மே மாதத்தில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் சராசரியாக 83.56 டாலருக்கு வாங்கப்பட்டிருக்கிறது.

இதுவே, முந்தைய ஏப்ரலில் ஒரு பேரல் 89.46 டாலருக்கும், கடந்த ஆண்டின் மே மாதம் 74.98 டாலருக்கும் வாங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் இருந்துதான்இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.