இந்தியா

22 இந்திய மாணவர்களின் விசா ரத்து : தமிழக மாணவர்கள் தவிப்பு

webteam

ஆஸ்திரேலியாவிற்கு எம்பிஏ படிக்க சென்ற தமிழக மாணவர்கள் உட்பட 22 இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எம்பிஏ படிக்க சென்ற தமிழக மாணவர்கள் உட்பட  22 இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. விசா ரத்து செய்ததற்க்கு போலி சான்றிதழ் தான் காரணம் என தெரிந்துள்ளது. கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் போலி சான்றிதழ்களை தயாரித்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிவிட்டதாக பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர். அசல் சான்றிதழ்களை கொடுத்த நிலையில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து செயல்படும் தனியார் ஏஜென்சி போலி சான்றிதழ் அளித்து அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தேசிய அங்கீகார வாரிய சான்றிதழ்களை தனியார் ஏஜென்சி போலியாக தயாரித்து வழங்கியதும் தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து ஆஸ்திரேலியாவில் படிக்கும் மேலும் பல மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் கேரள மாணவர்கள் 22 பேர் ஆஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர்.