இந்தியா

இந்திய வீரர்களை கொன்று குவிப்போம்: சீனா எச்சரிக்கை

இந்திய வீரர்களை கொன்று குவிப்போம்: சீனா எச்சரிக்கை

webteam

இந்தியா-சீனா எல்லையில் தோக்லாம் பகுதியில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேறாவிட்டால், அவர்களை கொன்றுவிடுவோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்திருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய இந்தியாவுக்கான முன்னாள் சீன தூதர் லியூ யூஃபா, எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் வீரர்களை எச்சரித்து வெளியேற்றுவது அல்லது கைது செய்வது அல்லது கொல்வது ஆகிய மூன்று வழிகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்‌. இதனால், இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியா - சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை விவகாரத்தை அமெரிக்க அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நரோட், பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விரைவில் சீனா செல்லவுள்ளார். இந்நிலையில், சிக்கிம் எல்லையில் தோக்லாம் பகுதியில் நீடிக்கும் அசாதாரண சூழலை தணிக்க இரு நாடுகளும் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.