இந்தியா

கேன்சல் செய்த டிக்கெட் மூலம் ரயில்வேக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

webteam

ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்ததால், இந்த வருடம் ரயில்வே துறைக்கு 1,407 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

ரயிலில் பயணம் செய்ய முன் பதிவு செய்யும் பணிகள் ஒரு சில காரணங்களுக்காக தங்களது பயணத்தை தவிர்க்க வேண்டி இருக்கும். எனவே, அவர்கள் டிக்கெட்டை ரத்து செய்வதால், அதற்கான பிடித்தம் போக மீதி தொகை அவர்களது கணக்கில் செலுத்தப்படும். அதன்படி, 2016-2017 ஆம் ஆண்டில் மட்டும் பயணிகளின் டிக்கெட் ரத்து செய்ததால் இந்திய ரயில்வே துறைக்கு 1470 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் அதிகம் ஆகும்.

ரயில்வே துறையில் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணிகளுக்கு இணையதளங்கள் மூலம் அதிக அளவில் சேவைகள் அளித்தல், ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.