இந்தியா

ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி மொழி சர்ச்சை.. தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி மொழி சர்ச்சை.. தெற்கு ரயில்வே விளக்கம்

Sinekadhara

ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்தால் குறுஞ்செய்தி இந்தியில் வருவதாகக் கூறி புகார்கள் எழுந்திருந்தது. அதற்கு தெற்கு ரயில்வே தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.

அதில்,  “ரயில் பயணி ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது குறுஞ்செய்தி இந்தியில் வந்ததாகவும், அதுகுறித்து மொழியை புரிந்துகொள்வதில் சிரமம் இருப்பதாகவும் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

பொதுவாக ஐஆர்சிடிசி வெப்சைட்டில் ‘profile' உருவாக்கும்போது, நமக்கு வரும் தகவல்கள் என்ன மொழியில் வரவேண்டும் என்பதற்கு அதில் மொழி தேர்வுசெய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இந்தி அல்லது ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது எழுந்துள்ள புகாரில், யாருடைய பெயரில் டிக்கெட் பதிவுசெய்யப்பட்டுள்ளதோ, அந்த ஐடியில் ‘profile' உருவாக்கும்போது இந்தி மொழி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் அவருக்கு குறுஞ்செய்திகள் இந்தி மொழியில் சென்றுள்ளது.

எனவே பயணிகள் ஆன்லைனில் பதிவுசெய்யும்போது சரியான மொழியை தேர்ந்தெடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளது.