இந்தியா

இந்திய விமானி திரும்பவில்லை - ஏஎன்ஐ தகவல்

இந்திய விமானி திரும்பவில்லை - ஏஎன்ஐ தகவல்

webteam

மிக் 21 ரக விமானத்தில் சென்ற இந்திய விமானி ஒருவர் இன்னும் திரும்பவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்து. அதேநேரம் இரண்டு இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. அத்துடன் ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது. இந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை என இந்திய விமானப் படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்திய விமானி ஒருவர் திரும்பவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மிக்-21 ரக விமானத்தில் சென்ற அவர் இதுவரையிலும் திரும்பாததால், அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுகிறது. இந்த சூழலில் ஒருவர் திரும்பாதது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாகிஸ்தான் விமானம் அத்துமீறிய போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் விமானி காணவில்லை என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.