இந்தியா

சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர்

சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர்

webteam

ஆஸ்திரேலியாவில் 32 வயதான இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி பெண்ணான பிரீத்தி ரெட்டி ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரீத்தி ரெட்டியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரீத்தி ரெட்டியின் முன்னாள் காதலரும் மருத்துவ மாநாட்டிற்கு வந்துள்ளார் என்பதும் அவருடன் பிரீத்தி ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது.

அதன் முன்பாக ஞாயிற்றுக்கிழமை பிரீத்தி ரெட்டி மெக்டொனால்ஸில் காலை உணவை முடித்துவிட்டு பில் கட்டும் காட்சியும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து விசாரணை முடிந்த சில மணி நேரங்களிலேயே சிட்னி சாலை விபத்தில் பிரீத்தியின் முன்னாள் காதலர் உயிரிழந்தார். இந்நிலையில், பிரீத்தி ரெட்டியின் கார் நிற்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காரின் டிக்கியை திறந்து பார்த்தனர். அதில் இருந்த சூட்கேசில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிரீத்தி ரெட்டி சடலமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து போலீசாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.