இந்தியா

உலகப் புகழ்பெற்ற பிரியாணி சமையல் கலைஞர் காலமானார்

உலகப் புகழ்பெற்ற பிரியாணி சமையல் கலைஞர் காலமானார்

webteam

பிரியாணி சமைப்பதில் உலகப் புகழ்பெற்ற இந்திய சமையற் கலைஞர் ஜாபர் பாய், மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதன்முறையாக டெல்லி தர்பார் ஹோட்டலை மும்பை நகரின் கிராண்ட் சாலையில் 1973ம் ஆண்டு தொடங்கிய ஜாபர் பாய், பிரியாணி சுவைக்காக பிரபலமாகப் பேசப்பட்டார். உணவுகள் பற்றி எழுதிவரும் குணால் விஜய்கர், " நான் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். அவருடைய மட்டன் பிரியாணியைப் போன்ற வேறு எங்கும் சாப்பிட்டதில்லை" என்கிறார்.

பின்னர் துபாய் நகரில் 1984ம் ஆண்டு டெல்லி தர்பார் ஹோட்டலைத் தொடங்கினார். இன்று  அது தொடர் ஹோட்டல்களாக உருவாகி, மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மும்பை பிரியாணியின் மன்னராகப் புகழப்படும் ஜாபர் பாய் ஓய்வுக்குப் பிறகு மும்பையில் தங்கியிருந்தார்.