உலக நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்து வரும் ஹிஸ்ப்-உத் தஹிரிர் தொடர்பாக பேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 9 நபர்கள் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் பத்து நபர்களை கைதுசெய்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பானது, உலக நாடுகள் பலவற்றால் தடை செய்யப்பட்டாலும் இந்தியாவில் தற்போதுவரை தடை செய்யப்படவில்லை.
இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த அமைப்பு காஷ்மீரை விடுவிக்கக்கோரி பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவியை நாடியதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பல சதி செயல்கள் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இந்திய அரசு தடை செய்துள்ளது.
இந்த வழக்கில் NIA அதிகாரிகளால் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி, ஃபைசுல் ரகுமான், தஞ்சையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் மற்றும் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அஜீஸ் அகமது என இதுவரை 10 நபர்களை கைதுசெய்து தேசிய புலனாய்வு முகமை தென்மண்டல அதிகாரிகள் அதிரடி சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.