இந்தியா

நடப்பு நிதியாண்டில் 9.2% பொருளாதார வளர்ச்சி - நிபுணர்கள் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் 9.2% பொருளாதார வளர்ச்சி - நிபுணர்கள் கணிப்பு

newspt

நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 9.2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

கொரோனா தொற்றால் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், உலகம் முழுவதும் பணக்கார நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை பொருளாதார சந்திப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. பல்வேறு தொழில்துறைகள் பெரும் பொருள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 9.2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

வேளாண்துறை, உற்பத்தித்துறை, கட்டுமானத்துறை ஆகியவை நல்ல வளர்ச்சியடைந்திருப்பதால், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1988-89 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச வளர்ச்சி இந்த ஆண்டிலேயே பதிவாகவுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கத்தால் பொருளாதர வளர்ச்சி 7.3 சதவிகிதம் பின்னடைவை சந்தித்திருந்தது. இதே பெயரளவு மொத்த உள்நாட்ட உற்பத்தி விகிதம் 17.6 சதவீதம் அதிகரிக்கலாம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.