அத்திப்பழம் புதியதலைமுறை
இந்தியா

இந்தியாவில் இருந்து புவிசார் குறியீடுடன் போலந்து சென்ற இந்திய அத்திப்பழ ஜூஸ்!

இந்திய விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உலக சந்தையில் வரவேற்பு

PT WEB

இந்தியாவில் இருந்து முதன்முறையாக அத்திப்பழச்சாறு போலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற, உடனடியாக அருந்தக்கூடிய அத்திப்பழ ஜூஸ் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து தனித்துவமான விவசாய உற்பத்திப் பொருட்கள் உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம், இதுபோன்ற விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.