இந்தியா

அழிவிலிருந்து கழுகுகளைக் காப்பாற்றிய இந்தியர்: இங்கிலாந்தில் அளித்த முதல் மரியாதை!

அழிவிலிருந்து கழுகுகளைக் காப்பாற்றிய இந்தியர்: இங்கிலாந்தில் அளித்த முதல் மரியாதை!

webteam

ஹரியானா வனத்துறையில் தலைமை வனப்பாதுகாவலராகப் பணியாற்றியவர் ராம் ஜகதி. 90 களில் கால்நடைகளுக்கு வழங்கப்பட்ட மருந்தின் காரணமாக பாதிக்கப்பட்ட கழுகு இனத்தைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டார். அவரது பணியைப் பாராட்டி இங்கிலாந்து நாட்டின் உயரிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்பிபி எனப்படும் அந்த அமைப்பு, பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கிவருகிறது. கால்நடைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத மருந்துகள், கழுகுகளுக்குப் பேரழிவைத் தாக்கக்கூடிய அளவுக்கு இருந்தது. அந்த மருந்தின் காரணமாக கழுகுகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைந்துவந்தது.

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மருந்தை தடை செய்ய போராடிய ராம் ஜெகதி, கழுகுகளுக்கான இனப்பெருக்க மையங்களையும் ஏற்படுத்தினார். இந்தியாவில் முதன்முறையாக, ஆபத்தான எட்டு வெள்ளைக் கழுகுகள், அவற்றில் ஆறு சிறைபிடிக்கப்பட்டவை, கடந்த வாரத்தில் மீண்டும் காட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆசிய கழுகு பாதுகாப்புத் திட்டம் கடந்த இருபது ஆண்டுகளாக வனவுயிர் பாதுகாப்புக்கான மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. " 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் எங்களுடைய சிறந்த குழுவினரின் முயற்சியால் இந்தியாவில் கழுகுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எங்கள் குழுவின் சார்பில் விருதைப் பெற்றுக்கொண்டேன். அழிந்துவரும் கழுகுகளைப் பாதுகாப்பதற்கான நல்ல அஸ்திவாரம் போடப்பட்டுளளது" என்றார் ஜகதி.