இந்திய கடலோர காவல்படையில் 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக சேவையாற்றிய கனக்லதா என்ற போர்க்கப்பல் நேற்றுடன் தனது பணியை முடித்துக் கொண்டது.
கடலோர காவல்படையில் 1997-ம் ஆண்டு மார்ச் 27-ல் கனக்லதா போர்க்கப்பல் சேர்க்கப்பட்டது. கனக்லதா பவ்ரா என்ற பெண் 1942 ஆம் ஆண்டு போர்க்களத்தில் வீரத்துடன் எதிரிகளை எதிர்த்து நின்றதால், இந்த போர்க்கப்பலுக்கு அதன் பெயர் வைக்கப்பட்டது. இதே பெயரில் புதிய கப்பல் வரவுள்ளதால் இக்கப்பலுக்கு ஒய்வு அளிக்கப்படுவதாகக் கடற்படை அதிகாரி தெரிவித்தார். கடலோர ரோந்துப் பணியின்போது 57 பேரை கனக்லதா கப்பல் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.