இந்தியா

பெரம்பலூர் தொழிலதிபருக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்லிய மலேசியாவின் இந்திய தூதர்

பெரம்பலூர் தொழிலதிபருக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்லிய மலேசியாவின் இந்திய தூதர்

நிவேதா ஜெகராஜா

கொரோனா காலத்தில், பொது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவி செய்த தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமாருக்கு, மலேசியா நாட்டின் இந்தியாவிற்கான தூதர் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் இந்திய தூதர் டத்தோ ஹிதயாத் அப்துல் ஹமீது என்பவர், தென்னிந்திய கலாச்சாரம், உணவு, கட்டடக்கலை உள்ளிட்ட பாராம்பரிய முறைகள் அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்திருந்தர். அப்படி வருகையில் பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள இந்தியாவை சேர்ந்த தொழிலபதிர் டத்தோ பிரகதீஷ்குமார் வீட்டிற்கு சிறப்பு கவுரவ விருந்தினராக சென்றிருந்தார்.

விருந்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், “கொரோனோ தொற்றினால் மலேசிய நாட்டில் பணியாற்றிய சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதால், தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியும் சந்தித்துள்ளது. மலேசிய நாட்டில் வருகின்ற மார்ச் 31 உடன் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட உள்ளது. இதனால், மீண்டும் சகஜ நிலை திரும்பும், மலேசியா நாட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப முடியும், நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும். மலேசியா திரும்பும் இந்தியத் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.

உக்ரைன் ரஷ்யா போரினால் மலேசியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால், மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வில்லை மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா - மலேசியா உறவு என்பது பல நூறு ஆண்டுகாளக தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு, மலேசியாவில் உறவினர்கள் இருப்பார்கள், அதே போல், மலேசியாவில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் இருப்பார்கள். இரு நாடுகளும் பொருளாதார, வணிக ரீதியாகவும், பலமாக உள்ளது.

உங்கள் நாட்டை சேர்ந்தவரும், எங்கள் நாட்டின் தொழிலதிபருமான டத்தோ பிரகதீஸ்குமார் கொரோனா காலத்தல் தனது சொந்த செலவில் இரு நாட்டை சேர்ந்த பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவரவர் நாட்டிற்கு விமானத்தில் செல்ல எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் அனுப்பி வைத்து உதவியிருந்தார். அவரது செயல், மிகவும் பாராட்டுக்குரியது. இவரைப்போன்றோரால், தென்னிந்திய கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது” என தெரிவித்தார். 

சந்திப்பின்போது அவருடன் தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.