இந்தியா

அனில் கபூரின் புதிய திரைப்படக் காட்சிகளுக்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு!

அனில் கபூரின் புதிய திரைப்படக் காட்சிகளுக்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு!

JustinDurai

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள 'ஏகே வெர்சஸ் ஏகே' படக் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்திய விமானப்படை.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'ஏகே வெர்சஸ் ஏகே' (AK vs AK) என்கிற திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. ஒரு கடுமையான இயக்குநர், நடிகர் ஒருவரின் மகளை கடத்தியதால் என்ன நடக்கிறது என்பதே இந்தக் கதை. இதில் நடிகராக அனில் கபூரும், இயக்குநர் கதாபாத்திரத்தில் அனுராக்கும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ட்ரெயிலரை அனில் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், 'ஏகே வெர்சஸ் ஏகே' படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. 

‘’இந்த வீடியோவில் உள்ள ஐ.ஏ.எஃப் சீருடை தவறாக வழங்கப்பட்டுள்ளது மற்றும் பயன்படுத்தப்படும் மொழி பொருத்தமற்றது. இது இந்திய ஆயுதப் படைகளில் உள்ளவர்களின் நடத்தை விதிமுறைகளுக்கு இணங்காது. தொடர்புடைய காட்சிகளை திரும்பப் பெற வேண்டும்’’ என்று ஐ.ஏ.எஃப் பதிவிட்டுள்ளது.

இந்திய விமானப்படை ஆட்சேபனை தெரிவித்துள்ளதால் 'ஏகே வெர்சஸ் ஏகே' படத்திற்கு சிக்கல் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.