இந்தியா

கல்லால் தாக்கிக்கொண்ட இந்திய, சீன வீரர்கள்!

webteam

இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற மோதல் குறித்த காட்சி தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் இந்திய, சீன ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபடுவது பதிவாகியிருக்கிறது. 
இந்திய வீரர்களோடு மோதலில் ஈடுபடவில்லை என சீன அரசு மறுத்துவந்த நிலையில், தற்போது இந்த காட்சி வெளியாகியிருக்கிறது. சுதந்திர தினத்தன்று அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்த சீன ராணுவ வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.