நாடாளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை ஒருபோதும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்ற கட்டத்தின் மீது லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஸ் இ முகமது பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கோபாலகிருஷ்ண காந்தியின் பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவுக்கூறுவோம் என்றும், எப்போதும் அவர்களுக்கு இந்தியா நன்றி செலுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.