இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் ஒப்புதல்: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் ஒப்புதல்: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

PT WEB

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஓரிரு நாள்களில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலெரியா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராஜென்கா (AstraZeneca) மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்துக்கு முதல் நாடாக பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்தத் தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு அவசர கால ஒப்புதல் கோரப்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலெரியா தெரிவித்துள்ளார்.

உருமாறிய கொரோனா குறித்தும் பேசிய ரன்தீப், டிசம்பர் மாதத்திற்கு முன்னதாகவே, அதாவது நவம்பர் மாதத்திலேயே இந்தியாவில் பரவியிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.

இதனிடையே, இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. முழு விவரம் > உருமாறிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு; தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

அவசர பய‌‌‌‌ன்பாட்டிற்காக கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மருந்தை விமானம் மற்றும் ரயில்கள் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதன் விவரம் > கொரோனா தடுப்பு மருந்தை கையாள தயாராகும் இந்தியா