ஒரு வருடத்திற்குள் ஜிபிஎஸ் இமேஜிங் முறையில் முழுமையாக சுங்கக் கட்டணம் செயல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “93 சதவீத வாகனங்கள் ஃபாஸ்டேக்-ஐ பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 7 சதவீத வாகனங்கள்தான் இரட்டை கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
ஒரு வருடத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து சுங்கக் கட்டணச் சாவடிகளும் அகற்றப்படும் என்று நான் சபைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். அதாவது சுங்கச்சாவடிகளில் நேரடியாக கட்டணம் வசூலிக்கும் முறை ஓராண்டுக்குள் நீக்கப்படும். ஜிபிஎஸ் இமேஜிங் முறையில் சுங்கக் கட்டணம் செயல்படுத்தப்படும்.
இதை பயன்படுத்துவதன்மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்ல வழிவகுக்கும். புதிய வாகனங்களில் ஃபாஸ்டேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பழைய வாகனங்களுக்கு இலவச ஃபாஸ்டேக்குகளை வழங்குவதாக அரசாங்கம் கூறியுள்ளது” என்றார்.