Population Twitter
இந்தியா

'மக்கள்தொகை பெருக்கத்தில் இந்தியா இந்த ஆண்டு சீனாவை முந்திவிடும்' - ஐ.நா. தகவல்

2023ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியா, சீனாவை முந்தி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐநா கூறியுள்ளது.

Justindurai S

ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் சார்பில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த புள்ளிவிவர அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதன்படி, 2023ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியா, சீனாவை முந்தி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது 2023ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும் எனவும் அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும் எனவும் மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Population

அதேபோல் இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும் என்றும் இதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவுமே கொண்டிருக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகை கடந்த ஆண்டுதான் முதல்முறையாக அதற்கு முந்தைய ஆண்டைவிட குறையத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.