இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலுக்காக 26 போர் விமானங்களை வாங்கும் இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலுக்காக 26 போர் விமானங்களை வாங்கும் இந்தியா

Veeramani

இந்திய கடற்படையின் பரிந்துரையின் பேரில் விரைவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலிலிருந்து இயக்குவதற்காக 26 கேரியர் அடிப்படையிலான போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் கோவாவில் உள்ள இந்திய கடற்படையின் கடற்கரை சோதனை நிலையத்தில் பிரெஞ்சு ரஃபேல் மற்றும் கடற்படை விமான சோதனைகள் ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில், யுஎஸ் எஃப்-18 சூப்பர் ஹார்னெட்டின் சோதனைகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு விமானங்களும் கோவாவில் உள்ள சோதனை நிலையத்தில் தீவிர சோதனைகளுக்கு உட்பட்டுள்ளன, ஆனால் இந்தியாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மீது இவை தரையிறங்கவில்லை. தற்போது இந்தியாவின் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, ஆகஸ்ட் 15, 2022 அன்று இந்த கப்பல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஐஎன்எஸ் விக்ராந்திற்கான போர் விமானங்களை குத்தகைக்கு வாங்க விரும்பவில்லை, ஆனால் இந்திய கடற்படையின் விமானப் பிரிவின் மதிப்பீட்டின் அடிப்படையில், பிரெஞ்சு டசால்ட் அல்லது யுஎஸ் போயிங்கில் இருந்து போர் விமானங்களை நேரடியாக ஜி-டு-ஜி ( அரசாங்கம் டு அரசாங்கம்) என்ற அடிப்படையில் வாங்கும் என விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.