இந்தியா

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

JustinDurai

ஒலியை விட வேகமாக பறக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒடிஷா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஏவுதளத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும் அது துல்லியமாக பாய்ந்து இலக்கை அழித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தெரிவித்துள்ளது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டிருந்தாலும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணை கப்பலையும் நிலப்பகுதியையும் தாக்கும் வகையில் இரு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை தற்போது நிலப்பகுதியிலிருந்து செலுத்தப்பட்ட நிலையில் அண்மையில் கடலில் இருந்து ஏவி சோதிக்கப்பட்டிருந்தது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்திடமும் கடற்படையிடமும் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் இனி அதன் மேம்பட்ட வடிவம் சேர்க்கப்பட உள்ளது