இந்தியா

இந்தியாவில் குறைந்து வருகிறதா மின்சாரத் தேவை ?

இந்தியாவில் குறைந்து வருகிறதா மின்சாரத் தேவை ?

jagadeesh

இந்தியாவில் மின்சாரத் தேவை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு படிப்படியாக குறைந்து வருவது மத்தி‌ய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

மின்சாரம் விநி‌யோகத்திற்கான தேவை சென்ற அக்டோபர் மாதத்தில் 13 புள்ளி 2 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய மின்சார ஆணையத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெரிய நிறுவனங்கள் நிறைந்த மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மின் தேவை குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் 22 புள்ளி 4 சதவிகிதமும், குஜராத்தில் 18 புள்ளி 8 சதவிகிதமும் மின்சாரத்தேவை குறைந்திருக்கிறது. 

பொருளாதார மந்தநிலையால் பல பெரிய நிறுவனங்கள் வேலையில்லா நாட்களை அறிவித்ததால் மின்தேவை கணிசமாகக் குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர, 4 சிறிய மாநிலங்களைத் தவிர நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களில் மின்சாரத் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதவிர, பருவமழை நன்கு பெய்துள்ளதால், விவசாயத்திற்கான மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளதும் தேவை குறையக் காரணமாகக் கூறப்படுகிறது.