இந்தியா

பாக்.,மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமா? - அபத்தமான பேச்சு என இந்தியா கருத்து

பாக்.,மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமா? - அபத்தமான பேச்சு என இந்தியா கருத்து

webteam

பாகிஸ்தான் நாட்டின் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பாக்., அமைச்சரின் கருத்து அபத்தமானது என இந்தியா தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்ட நிலையே நிலவி வருகிறது. அவ்வப்போது பாகிஸ்தான் எல்லை மீறுவதும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தும் வருகிறது. இந்நிலையில் முல்தான் நகரில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, பாகிஸ்தான் மீது இந்தியா வரும் வாரத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.  

வரும் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை உள்ள நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதல் புல்வாமா தாக்குதல் பாணியாக இருக்கலாம் என்றும் இது குறித்து பாக்., பிரதமர் இம்ரான் கானிடம் தான் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த  கருத்துக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் தொடர்பான செய்தியையும் மறுத்துள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ராவேஷ் குமார், இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாக  பாகிஸ்தான் கூறியுள்ள இந்த கருத்து பொறுப்பற்றது எனவும், அபத்தமானது எனவும் கூறியுள்ளார்.