இந்தியாவின் மிகப்பெரிய சிரிஞ்ச் மற்றும் ஊசி தயாரிப்பு நிறுவனத்தின் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் இந்துஸ்தான் சிரிஞ்சஸ் அண்டு மெடிக்கல் டிவைசஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவின் மொத்த ஊசி மற்றும் சிரிஞ்ச் தேவையில் மூன்றில் இரு பங்கை பூர்த்தி செய்கிறது. மேலும் இது உலகின் மிகப்பெரிய சிரிஞ்ச் உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஃபரீதாபாத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் 4 ஆலைகளில் 3 மூடப்பட்டுள்ளன. ஆலைகள் மூடலால் தினசரி ஒன்றரை கோடி ஊசிகள் மற்றும் 80 லட்சம் சிரிஞ்சுகள் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், தற்போது தங்கள் கைவசம் உள்ள ஊசிகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இவ்விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கும் மத்திய சுகாதாரத்துறைக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.