இந்தியா

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 13.5% உயர்வு!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 13.5% உயர்வு!

ச. முத்துகிருஷ்ணன்

2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தெரிவித்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 32.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 36.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் இடையிலான முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 20.1 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6.6 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் இடையிலான முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி மத்திய ரிசர்வ் வங்கி கணிப்பை விட குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 16.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட 2,7 சதவீதம் குறைவாகவே ஜிடிபி வளர்ச்சி பதிவாகியுள்ளது.