மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் - 1 எச் தோல்வியில் முடிந்தது.
பிஎஸ்எல்வி ராக்கெட்டிற்குள் இருந்த வெப்பத் தடுப்பு சாதனம் பிரிந்து வெளியே வரவில்லை என்றும் எனவே அதற்குள் வைக்கப்பட்டிருந்த செயற்கைக் கோளை சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்த இயலவில்லை என்றும் இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்தார். எனினும் ஏவுமேடையில் இருந்து பிஎஸ்எல்வி சி 39 ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டு முதல் 3 கட்டங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டதாக கிரண் குமார் செய்தியாளர்களிடம் கூறினார். தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்றும் அவர் கூறினார். செயற்கைக் கோளை வடிவமைக்கும் மற்றும் சோதிக்கும் பணிகளில் முதன்முறையாக தனியார் பங்களிப்பு மிக அதிக அளவு பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.