இந்தியா

இந்தியளவில் குறைந்த கொரோனா பாதிப்பு: எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியளவில் குறைந்த கொரோனா பாதிப்பு: எண்ணிக்கை எவ்வளவு?

சங்கீதா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 2-வது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வரைஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதிக்குப் பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவாகியது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று முதன்முதலாக, ஒரு லட்சத்திற்கும் கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 67 ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் 83 ஆயிரத்து 876 பேருக்கு உறுதியான நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 474 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 1,188 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,02,874 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,80,456 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,40,658 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 9,94,891 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் 27 நாட்களுக்குப் பிறகு, கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,70,21,72,615 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பரவல் விகிதம் 5.02 சதவீதமாக உள்ளது.