இந்தியாவின் முதல் கடற்படை பெண் விமானியாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் தேர்வாகியுள்ளார்.
இந்திய கடற்படையில் இதுவரை ஆண் விமானிகள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடற்படையின் முதல் விமானி என்ற பெருமையை சுபாங்கி பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுபாங்கியின் தந்தையும் கடற்படையில் கமாண்டராக பணியாற்றிவர். இந்நிலையில் தனது மகள் கடற்படை விமானியாக தேர்வாகியதன் மூலம், கனவு நிறைவேறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சுபாங்கிக்கு, ஹைதராபாத்தில் உள்ள விமானப்படைத்தளத்தில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த விமானிகள் பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்திய கடற்படையின் ஆயுத ஆய்வாளர்களாக முதல்முறையாக 3 பெண்கள் தேர்வாகியுள்ளனர். புதுடெல்லியை சேர்ந்த ஆஸ்தா சேகால், புதுச்சேரியை சேர்ந்த ரூபா, கேரளாவை சேர்ந்த சக்தி மாயா ஆகிய மூவரும் இந்த பெருமையை பெற்றுள்ளனர். இவர்கள் கடற்படையில் ஆயுதம் மற்றும் தகவல் பிரிவில் ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் பெண்கள் தற்போது கடற்படையிலும் சாதனையைத் தொடங்கியுள்ளனர்.