இந்தியா

எல்லையில் நிலவும் அசாதாரண சூழல்: ரஷ்யாவுடன் இணையும் இந்தியா

எல்லையில் நிலவும் அசாதாரண சூழல்: ரஷ்யாவுடன் இணையும் இந்தியா

webteam

இந்தியா - ரஷ்யா நாடுகளின் முப்படைகள் இணைந்து அக்‍டோபர் மாதம் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

இந்தியா முதல் முறையாக அண்டை நாட்டுடன் இணைந்து முப்படைகளின் போர் பயிற்சிகளை ரஷ்யாவில் மேற்கொள்ள உள்ளது. ரஷ்யாவுடன் இணைந்து இந்திரா என்ற பெயரில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

இந்த கூட்டுப் பயிற்சியில் இரு நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் பயிற்சியை மேற்கொள்கின்றன. இதில், நேரடி துப்பாக்கி சூடு பயிற்சிகள், பயங்கரவாதத்திற்கு எதிரான வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போராடுவது உள்ளிட்ட கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்கின்றன. 

இந்தியாவிலிருந்து மொத்தம் 350 வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

சிக்கிம் எல்லையில் சீனா உடனான எல்லை பிரச்னை, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அத்துமீறிய தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் இந்தியா இந்த கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.