ind - china border x page
இந்தியா

சீனாவுக்குப் பதிலடி|திபெத்தில் 30 இடங்களுக்குப் பெயரை மாற்றும் இந்தியா!

Prakash J

அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத்திய பகுதி என்று சொந்தம் கொண்டாடும் சீனா, கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அம்மாநிலத்தில் உள்ள Zangnan பிரதேசத்தில் உள்ள 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 மலைப்பாதைக்கு தங்களது மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் பெயர் சூட்டியிருந்தது சீனா.

அந்நாட்டின் பொதுவிவகாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த 30 பெயர்களை கொண்ட பட்டியலை சீனா வெளியிட்டதுடன், வரும் மே 1ஆம் தேதியில் (கடந்த) இருந்து இந்தப் பெயர்கள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க: ஜெய்ப்பூர்| ரூ.300 மதிப்புள்ள போலி நகைகளை ரூ.6 கோடிக்கு வாங்கிய அமெரிக்கப் பெண்!

இந்த நிலையில், புதிதாக பதவியேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, திபெத்தின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் பரிந்துரைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

அருணாசலப் பிரதேசத்தில் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாகக் கூறி சில பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்து, இந்தியாவை வெறுப்பேற்றியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திபெத் பகுதியைப் பற்றி நன்கு வரலாற்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் இந்த மறுபெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், இதற்கு டெல்லி அனுமதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாற்றம் தொடர்பாக இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கேற்ப இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கான வரைபடங்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிக்க: ”பும்ரா பெயரைக் கேட்டாலே பயம்” - பாகிஸ்தான் பேட்டர்களைச் சாடிய வாக்கார் யூனிஸ்!