இந்தியா

நமீபியா வழங்க முன்வந்த சிறுத்தைகளை வாங்க மறுத்த இந்தியா! என்ன காரணம்?

நமீபியா வழங்க முன்வந்த சிறுத்தைகளை வாங்க மறுத்த இந்தியா! என்ன காரணம்?

webteam

நமீபியா வழங்கத் தயாராக இருந்த சிறுத்தைகளைப் பெற இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சிறுத்தையின் ஒரு வகை இனம் முற்றிலும் அழிந்துபோய் பல பத்தாண்டுகள் ஆகி விட்ட நிலையில், அவற்றை மத்தியப பிரதேச வனவிலங்கு பூங்காவிற்கு வழங்க நமீபியா முன்வந்தது. இதற்காக நமீபியாவுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதற்கட்டமாக சிறுத்தைகளை நமீபியா இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிடப்பிட்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு சிறுத்தைகளை வாங்கும் முடியை இந்திய அரசு கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தங்கள் நாட்டின் வனத்தில் சுதந்திரமாக திரியாத, கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்ட சிறுத்தைகளை வழங்க நமீபியா முன்வந்திருப்பதால் அவற்றைப் பெற இந்திய வனத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்ட சிறுத்தைகளுக்கு வேட்டையாடத் தெரியாது என்பதாலும் அவற்றை வனத்தில் சுதந்திரமாக விட்டால் அவை இறக்க நேரிடும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.