இந்தியா

கர்தார்பூர் வழித்தட திட்டம்: இந்தியா-பாக். அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

கர்தார்பூர் வழித்தட திட்டம்: இந்தியா-பாக். அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

webteam

கர்தார்பூர் வழித்தட திட்டம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக, இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில், ’தர்பார் சாஹிப்’ என்ற குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் சீக்கியர்கள் விசா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இன்றி இந்த குருத்வாராவுக்கு சென்று வர கர்தார்பூர் வழித்தட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத் த பாகிஸ்தான் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று இருநாட்டு பிரதிநிதி குழுக்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன. 

அட்டாரி வாகா எல்லையில், பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். யாத்ரீகர்களின் பயணம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இதில் பேசப்படுகிறது.