இந்தியா

“சீனா எப்போதும் இப்படிதான்” - லடாக் மோதல் குறித்து முதன்முதலாக வாய்திறந்த மத்திய அமைச்சர்

“சீனா எப்போதும் இப்படிதான்” - லடாக் மோதல் குறித்து முதன்முதலாக வாய்திறந்த மத்திய அமைச்சர்

webteam

லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்தது என்றும் ஆனால் சீனாவில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சீனாவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சீன ராணுவத்தினரின் அத்துமீறலே மோதலுக்குக் காரணம் என இந்திய ராணுவமும், இந்திய வீரர்களின் அத்துமீறலே காரணம் எனச் சீன ராணுவமும் குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில், லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்தது என்றும் ஆனால் சீனாவில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமை ஜெனரலுமான விகே சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சீனா தங்கள் உயிரிழப்புகளை மறைக்கிறது. எப்போது அவர்கள் அப்படிதான். 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கூட சீனா உயிரிழப்புகளை ஏற்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சீனாவிற்குப் பதிலடி கொடுக்க பல வழிகள் உள்ளன. சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும். சீனாவைப் பொருளாதார ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும். அனைத்து வழிகளையும் முயற்சி செய்துவிட்டு அவை தோல்வியடைந்தால் இறுதியாகப் போர் புரிவது குறித்து முடிவெடுக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.