இந்தியா

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவிற்கு 3-வது இடம்

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவிற்கு 3-வது இடம்

webteam

உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (OECD) ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சர்வதேச உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (OECD) ஆகியவை இணைந்து 2017-2026 ஆண்டிற்கான உத்தேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இதில் இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டுறைச்சியின் அளவு 1.56 மில்லியன் டன்கள். இது 2026 ஆம் ஆண்டு, உலக மாட்டிறைச்சி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 16 சதவீதம் அதாவது 1.93 மில்லியன் டன் ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவது எருமை மாடுகளே என்றும் அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.