இந்தியா

வேகமாக 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை

வேகமாக 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை

Sinekadhara

உலகிலேயே வேகமாக 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மருத்துவ பணியாளர்களைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று வரை 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியா 85 நாட்களில் இந்த சாதனையை எட்டியுள்ளது. அமெரிக்காவில் 89 நாட்களிலும், சீனாவில் 102 நாட்களிலும் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.