இந்தியா

இரண்டு மாதங்களில் 11 ஏவுகணைகளை சோதனை செய்த இந்தியா 

இரண்டு மாதங்களில் 11 ஏவுகணைகளை சோதனை செய்த இந்தியா 

EllusamyKarthik

இந்திய கடற்படையின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. 

இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் 11 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது  இந்தியா.

சீனாவுடன் ஏற்பட்டுள்ள எல்லை விவகார பிரச்னையை தொடர்ந்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Surface-to-surface சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை, ஆண்டி ரேடியேஷன் ஏவுகணையான ருத்ரம் 1 ஏவுகணையும் இதில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்திய சீன எல்லையில் பிரம்மோஸ் ஏவுகணை உட்பட சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இந்தியா நிலை நிறுத்தி வைத்துள்ளது.    

செப்டம்பர் 7, செப்டம்பர் 22, செப்டம்பர் 23 (2), செப்டம்பர் 30, அக்டோபர் 1, அக்டோபர் 3, அக்டோபர் 5, அக்டோபர் 10, அக்டோபர் 18 தேதிகளில் இந்தியா ஏவுகணைகளை சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.