இந்தியா

பப்ஜி விளையாட்டுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா

பப்ஜி விளையாட்டுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா

Sinekadhara

செப்டம்பர் 2-ஆம் தேதி இந்திய அரசு 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடைவிதித்தது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்குள்ளேயே பெரும்பாலான செயலிகள் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போயின. அதில் பிரபலமான ஆன்லைன் மல்டிப்ளேயர் விளையாட்டான பப்ஜியும் ஒன்று.

பப்ஜி விளையாட்டின் வன்முறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் இதை நீக்குவதாக அறிவித்திருந்தது. அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் விடுத்து, தாமே முழு பொறுப்பையும் ஏற்கும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டை 50 மில்லியனுக்கு அதிமானோர் விளையாடி வந்தனர். ஆனால் தற்போது ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் அக்டோபர் 30 முதல் இயங்காது என நிரந்தர தடை விதித்துள்ளது மத்திய அரசு.

இதுபற்றி பப்ஜி நிறுவனம் கூறுகையில், ‘’ டென்சென்டுடனான எங்கள் உறவை முடித்துக்கொள்வதன்மூலம் இந்தியாவில் இந்த விளையாட்டை நிலைப்படுத்த விரும்பினோம். பயனர்களின் தரவுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம். இந்தியாவின் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம். ஆனால் எங்கள் தனியுரிமைக் கொள்கைப்படி அனைத்துப் பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானது. இந்தியாவின் இந்த முடிவுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி’’ என்று கூறியுள்ளது.