இந்தியா

உக்ரைன் படுகொலை: ஐ.நா.வில் இந்தியா கண்டனம் தெரிவித்து பேசியது என்ன?

உக்ரைன் படுகொலை: ஐ.நா.வில் இந்தியா கண்டனம் தெரிவித்து பேசியது என்ன?

JustinDurai

உக்ரைனில் புச்சா நகரில் நிகழ்த்தப்பட்டுள்ள படுகொலைகளுக்கு ஐ.நா.சபையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த சுதந்திரமான விசாரணைக்கான அழைப்பை இந்தியா ஆதரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 40 நாள்களுக்கும் மேல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. போரின் கோரங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. உக்ரைனின் புச்சா நகர வீதிகளில் குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் 20 பேரின் உடல் கிடந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐநா பாதுகாப்பு சபையில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி T.S.திருமூர்த்தி, புச்சா நகர படுகொலைகள் பெரிதும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார். இவற்றுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், சுதந்திரமான விசாரணைக்கான அழைப்பை ஏற்பதாகவும் அவர் கூறினார். உக்ரைனில் நிலவும் மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இந்தியா மருந்துகளையும் அத்தியாவசியப் பொருள்களையும் அனுப்பி வருவதாக T.S.திருமூர்த்தி குறிப்பிட்டார். ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டியது குறித்து தொடக்கத்திலிருந்தே இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: போரை கண்டிக்கணும்’ உக்ரைன் போரின் தாக்கம் குறித்து மக்களவையில் விரிவான விவாதம்-முழுவிவரம்