இந்தியா - சீனா இடையே எல்லை சண்டை ஏற்படலாம் என காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் ரகசிய ஆவணம் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக நமக்கும் அண்டை நடான சீனாவிற்கும் எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில், இது தற்பொழுது விஸ்வரூபம் எடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020 ம் ஆண்டு இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் பிரதேசத்தில், இந்தியா - சீனா எல்லைகளைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைந்த இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் இரு நாடுகளும் கைகலப்பில் ஈடுப்பட்டது. இந்த மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி உள்ளிட்ட 24 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
தற்பொழுது மீண்டும் எல்லைப்பிரச்சனை தொடங்க வாய்ப்புள்ளதாக, கடந்த ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில், லடாக் காவல்துறை ரகசிய ஆவணம் ஒன்றை தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் எல்லை பகுதிகளில் உள்ள காவல்துறை மற்றும் உளவுத்துறை மூலம் மேற்கொள்ளபட்ட ஆய்வில், வரும் காலங்களில் இந்தியா - சீனா இடையே அதிக எல்லை பிரச்சனை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவில் ஆக்கிரமிப்புகள் குறித்தும் அந்த ரகசிய ஆவணத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக எல்லையில் சீனாவின் பலம் அதிகரிப்பு குறித்தும், எதிர்காலத்தில் இந்திய - சீனா இடையே அதிக எல்லை மோதல் ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.