இந்தியா

தொழிற்துறையில் சீனா போன்ற பார்வை இந்தியாவிற்கு உள்ளதா? ராகுல்காந்தி கேள்வி

webteam

தொழிற்துறையில் சீனாவைப் போன்ற சரியான பார்வை இந்தியாவிற்கு உள்ளதா? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், நியூஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டான் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், மேக் இன் இந்தியா என்ற பெயரில் பெரிய தொழிற்சாலைகளை அமைப்பதை விட, சிறிய தொழிற்சாலைகளை ஊக்குவித்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று தெரிவித்தார். 

தொழிற்துறையில் சீனா சரியான தொலைநோக்குப் பார்வையுடன் அதிவேகமாக முன்னேறி வருவதாகவும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியா முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொழிற்துறையில் சீனாவைப் போன்ற பார்வை இந்தியாவுக்கு உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்திய அரசியலில் தலைதூக்கியுள்ள பிரிவினைக் கருத்துகள் மிகுந்த கவலை அளிப்பதாகவும், பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்தார்.