இந்திய கம்யூனிஸ்ட் கட்சி PT
இந்தியா

வருமான வரித்துறை நோட்டீஸ்.. காங்கிரசை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்!

வருமான வரித்துறை, காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

PT

வருமான வரித்துறை, காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிலுவையில் இருக்கக்கூடிய ரூ.11 கோடி வருமானவரியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செலுத்தவேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே, காங்கிரஸுக்கு ரூபாய்1823 கோடி வருமானவரி செலுத்தவேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டிஸ் அனுப்புயுள்ளது.

11 கோடிக்கான காரணம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்த பொழுது, பழைய PAN CARD களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் விதிகள் சரியாக பின்பற்றாமல் மீறப்பட்டுள்ளன என்றும், இதனை அடுத்து, கட்டாமல் விட்ட வரி மற்றும் அதற்கான வட்டி என்று மொத்தமாக 11 கோடி நிலுவையில் இருப்பதாக வருமான வரி துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

கங்கிரஸ் கட்சி, அரசியல் ரீதியாக நாங்கள் குறிவைத்து பழிவாங்கப்படுகிறோம் என்று வருமானவரித்துறையின் மீது குற்றம் சாட்டுவதைப்போன்று, ஒரு குரல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருமானவரிதுறையின் மீது எழுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.