இந்தியா

திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா !

திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா !

jagadeesh

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் பொது முடக்க தளர்வுகளுக்கு பின்பு திறக்கப்பட்டதில் இருந்து 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருப்பதி திருமலை கோயில் பொது முடக்க தளர்வின்போது மீண்டும் திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை கோயில் அர்ச்சகர் முதல் ஊழியர்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் அர்ச்சகர்களில் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங் கூறும்போது "கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 402 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 338 பேர் மருத்துவமனைகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும் கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை பக்தர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. தேவஸ்தான ஊழியர்கள் உண்மையாக வேலைப் பார்த்தார்கள். திருப்பதியில் மட்டுமா கொரோனா அதிகரித்தது, ஒட்டுமொத்த நாட்டிலும் தான்" என்றார் அவர்.