இந்தியா

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது இடுக்கி

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது இடுக்கி

webteam

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேரும் பூரண நலம் அடைந்து வீடு திரும்பினர்.

இடுக்கியின் மூணாறில் தங்கியிருந்த பிரிட்டனைச் சேர்ந்த பைரன் என்பவருக்கு முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். அதேபோல, துபாயிலிருந்து திரும்பிய இளைஞர் மற்றும் காங்கிரஸ் பிரமுகருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர்.

காங்கிரஸ் பிரமுகரோடு தொடர்பிலிருந்த ஐந்து பேர் மற்றும் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய ஒருவர் மற்றும் அவரது மகள் என ஏழு பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி 4 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மீதமுள்ள மூன்று பேரும் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தற்போது இடுக்கி மாறியுள்ளது. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.