இந்தியா

காதலர் தினம் இனி பெற்றோரை வணங்கும் தினம்: ராஜஸ்தானில் அதிரடி

webteam

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை பெற்றோரை வணங்கும் தினமாகக் கொண்டாட அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உலகெங்கும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரம் புகுத்தப்பட்டுள்ளதாக பல இந்து அமைப்புகள் காதலர் தின கொண்டாடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பிப்ரவரி 14ம் தேதியை தாய் தந்தையரை வணங்கும் தினமாக கொண்டாட ராஜஸ்தான் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வித்துறையில் பின்பற்றப்படும் காலண்டரில் இதை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தினத்தன்று பள்ளி மாணவர்களின் பெற்றோரை அழைத்து கலைநிகழ்ச்சி நடத்தி கவுரவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய கலாச்சாரத்தைக் காக்க முடியும் என ‌ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர் வாசுதேவோ தேவ்னானி தெரிவித்துள்ளார்.