இந்தியா

’6 மாதத்தில் 11031 பேரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட்’ மிரள வைத்த புனே ஆர்.டி.ஓ

EllusamyKarthik

புனே நகர காவல் துறையும், ஆர்.டி.ஓவும் இணைந்து கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதத்தில் சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 11031 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

ரேஷ் டிரைவிங், சிக்னல் ஜம்பிங், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டியவர்களின் டிரைவிங் லைசன்ஸை தற்போது தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 

11031 பேரில் 4092 பேர் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டியதற்காகவும், 1683 பேர் மது அருந்தியமைக்காகவும், 1752 பேர் ஹெல்மெட் இல்லாத காரணத்தினாலும், 1541 பேர் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்றதற்காகவும், 571 பேர் ரேஸ் டிரைவ் செய்த காரணத்தினாலும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘இந்த நடவடிக்கையின் மூலம் விபத்துகளின் எண்ணிக்கை நிச்சயம் குறையும். இருப்பினும் முழுநேர அதிகாரிகளை பணியில் அமர்த்தி அதன் மூலம் நேர்த்தியாக திட்டம் வகுத்து இதற்கு தீர்வு காண வேண்டும். அதே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும் புனேவில் விபத்துகளை குறைக்கலாம்’ என வலியுறுத்துகிறார் தன்னார்வலரான பிரஷாந்த்.