இந்தியா

இந்தியாவில் பப்ஜிக்கும் வருகிறதா தடை? -ட்விட்டரை கதறவிடும் நெட்டிசன்கள்..!

இந்தியாவில் பப்ஜிக்கும் வருகிறதா தடை? -ட்விட்டரை கதறவிடும் நெட்டிசன்கள்..!

webteam

இந்தியாவில் பப்ஜிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது முதல் நெட்டிசன்கள் ட்விட்டரில் பப்ஜி குறித்த ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர். 

இந்தியா சீனாவிற்கு இடையே எல்லைப்பிரச்னை தொடர்ந்து வந்ததையொட்டி சீனா இந்தியாவின் மீது சைபர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையிலும், தகவல் பாதுகாப்பு நலன் கருதியும் இந்தியா சீனாவிற்கு சொந்தமான டிக்டாக் உட்பட 59 ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதித்தது. இதற்கு பதிலாக சிங்காரி உட்பட பல ஆப்கள் சந்தையில் களமிறக்கப்பட்டன. இருப்பினும்  டிக்டாக் மீது அதிமோகம் கொண்ட சிலர் டிக்டாக்கை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில் தற்போது இந்தியாவில் சீனாவிற்குச் சொந்தமான 295 ஆப்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்க தகவல்தொழில் நுட்பத் துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாயுள்ளது. இதில் இளைஞர்களிடம் மிகப் பிரபலமாக இருக்கும் பப்ஜி மற்றும் சிலி ஆப்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்தச் செய்தி வெளியானது முதலே நெட்டிசன்கள் ட்விட்டரில் பப்ஜி தடை குறித்த ட்ரோல்களை வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இதன் மூலம் பப்ஜி இந்திய  ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.