இந்தியா

டெல்லியில் மேலும் மோசமடைந்தது காற்றின் தரம்

டெல்லியில் மேலும் மோசமடைந்தது காற்றின் தரம்

JustinDurai
டெல்லியில் ஒருபுறம் குளிர் வாட்டி வரும் சூழலில் மறுபுறம் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுங்குளிர் வாட்டி வருகிறது. 9.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர மிகுந்த தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில் காற்று மாசின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி காற்று மாசு தரம் 458 ஆக பதிவாகியிருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசின் தரம் பூஜ்யத்தில் இருந்து 50 வரை இருப்பது நன்மை. 51 முதல் 100 வரையிலான தரம் திருப்திகரமானது என்றும், 101 முதல் 200 வரையிலான தர குறியீடு மிதமான பாதிப்பு என்றும், 401 முதல் 500 வரையிலான குறியீடுகள் மிக மோசமானது என்றும் கூறப்படுகிறது.