இந்தியா

பரப்பன அக்ரஹாரா சிறை ஹவுஸ் புல்: 36 கைதிகளுக்கு எய்ட்ஸ்!

webteam

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2 ஆயிரத்து 300 கைதிகளை அடைக்கலாம். ஆனால், 4,400 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 
இந்த நிலையில், மாநில சுகாதாரத்துறை மூலம் சிறை கைதிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் சமீபத்தில் சிறையில் உள்ள மருத்துவமனையில் நடந்தது. இந்த முகாமில் கைதிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறையில் உள்ள 36 கைதிகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சில கைதிகள் காசநோயாலும், பல கைதிகள் வலிப்பு நோயாலும், பலர் மனநோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

சிறையின் உள்ளே இருக்கும் மருத்துவமனையில் 3 டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். தினமும் ஏறக்குறைய 200 கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சிறையில் 4,400 கைதிகள் இருப்பதால் 3 டாக்டர்கள் போதாது என கூறப்படுகிறது.